யாழில் வீதிக்கு குறுக்காக பாரவூர்தியை நிறுத்திய சாரதி : அசௌகரியத்துக்குள்ளான பலர்
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதியில் பாரவூர்தியின் சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று(4) காலை 07.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், “பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றும் பேருந்தானது மருதங்கேணி தெற்கு பகுதியூடாக பயணிப்பது வழமை.
வீதியை மறித்து நிறுத்தப்பட்ட பாரவூர்தி
மருதங்கேணி பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மாடி வீட்டிற்கு ஓடுகளை இறக்குவதற்காக பாரவூர்தி ஒன்று வீதியை மறித்து நிறுத்தப்பட்டதனால் பேருந்து மற்றும் ஏனைய வாகனங்கள் குறித்த பகுதியால் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவானது.
உடனடியாக பாரவூர்தியை அப்புறப்படுத்துமாறு சாரதிக்கு கூறிய போதும் அவர் அதனை அகற்றாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்ற முடியாமல் பேருந்தானது மாற்று வழியால் திரும்பிச் சென்றதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு தாமதமாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் தூரப் பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் குறித்த பாரவூர்தி சாரதியின் நடவடிக்கையால் பேருந்து இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் - பு. கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 16 நிமிடங்கள் முன்
