மோடியின் விஜயத்தில் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை விஜயத்தை வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அபிவிருத்திக்கான ஒரு வாய்ப்பாக அரசாங்கம் பயண்படுத்தி கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கான பொறுப்பு கூறல் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அத்தோடு அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் தீர்வு குறித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவி்ல்லை.
ஆகவே, முடிந்தது பொருளாதார ரீதியில் சரி மக்களின் அபிவிருத்தி குறித்து சரி இந்திய பிரதமரிடம் அரசாங்கம் கலந்துரையாட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களுக்கான தீர்வு, இந்திய பிரமர் வருகை, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்