சிறுவர் தினத்தை கொண்டாட மதுபானம்! கையும் களவுமாக பிடிபட்ட மாணவர்கள்
உலக சிறுவர் தினத்தை கொண்டாட பாடசாலைக்கு மதுபான போத்தல்களை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக மிட்டியாகொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, நேற்று(01.10) அம்பலாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த நான்கு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடுமையான எச்சரிக்கை
விசாரணையில், நேற்று முந்தைய நாள் ஹிக்கடுவவில் உள்ள ஒரு உள்ளூர் மதுபானக் கடையில் இருந்து வாங்கிய மது போத்தலில் இருந்த மதுவை தண்ணீர் போத்தலில் கொண்டு வந்ததது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் நால்வரையும் கடுமையான எச்சரிக்கைகளுடன், நேற்று(01.10) பெற்றோரிடம் ஒப்படைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அத்துடன், பெற்றோரின் சம்மதத்துடன் நான்கு மாணவர்களும் சம்பந்தப்பட்ட பாடசாலையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிட்டியாகொடை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
