கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
covid
srilanka
students
ministry-of-health
By Sumithiran
கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாடசாலை வகுப்பறை ஒன்றில் கொவிட் தொற்றுக்குள்ளான மாணவரிடமிருந்து, ஒரு மீற்றர் இடைவெளியை பேணி, முகக்கவசம் அணிந்து, முகத்துக்கு நேரான தொடர்பை பேணாத சக மாணவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்கள், கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
