“சினோபாம்” தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளியான முடிவு!
Corona
Synobom
Chandima Jeevanthara
By Chanakyan
சினோபாம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட சகல வயதினருக்கும் உருவாகின்ற கொரோனா எதிர்ப்புடல் தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இரண்டாம் தடுப்பூசி ஏற்றலின் பின்னர் 12 வாரங்களில் கொரோனா எதிர்ப்புடல் நலிவடைகின்றது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களது எதிர்ப்புடல் நலிவடைகின்றது.
எவ்வாறாயினும் அவர்களின் டி உயிரணுக்கள் தொடர்ந்தும் செயற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.