வளப் பற்றாக்குறையை வென்ற கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் வெற்றி பயணம்
தேசிய மட்டத்தில் தொடர் சாதனைகளை படைத்துவரும் நு/கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மலையகத்தில் அதிக மாணவர்களைக் கொண்டடைந்துள்ள பாடசாலையாக உள்ளபோதிலும், அங்கு போதிய மைதான வசதிகளோ, விளையாட்டு துறைசார் திட்டங்களோ இல்லை கவலைக்குறியதே.
அண்மையில் இடம்பெற்ற தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் (Under 20) ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்தத்திருந்தது.
எனினும் அவர்களது வெற்றிக்கு பின்னர் பாடசாலையில் மற்றும், விளையாட்டு ரீதியாக தாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் வீரர்கள் ஐ.பி.சி ஊடக நேர்காணலில் மனம்திறந்திருந்தனர்.
வசதிகளற்ற மைதானத்திற்குள்ளேயே தங்களின் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டும், துரையப்பா விளையாட்டு அரங்கம் போன்ற பெரிய மைதானங்களில் உள்ள சவால்களை எதிர்கொண்டும் இந்த நிலையை அடைந்துள்ளமையை அவர்கள் ஆதங்கமாக வெளிப்படுத்தினர்.
எனவே, பெற்றோர்களும் சமூகமும் மாணவர்களின் விளையாட்டிற்குத் தடையாக இருக்காமல் ஊக்கமளிக்க வேண்டும் என்றும், தங்களின் விளையாட்டுத் தேவைகளுக்கான மைதானம் மற்றும் காலணிகள் (Sports Boots) போன்ற வசதிகளைச் செய்து தரப் பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |