மன அழுத்தத்தில் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே! அமைச்சர் ஜோன்ஸ்டன் கருத்து
Corona
Johnston Fernando
SriLanka
Dr. Sudarshini Fernandopulle
By Chanakyan
கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மன அழுத்தத்தில் இருப்பதாக ஆளும் கட்சி பிரதம கொரடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதனால்தான் அவர் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு வௌிநாட்டு உதவி கோரியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் நிதி பற்றாக்குறை இல்லை எனவும் தேவையான சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும்.
ஆனாலும் மக்களை தயார்படுத்துவதற்கு அல்லது எச்சரிப்பதற்கு இவ்வாறான கருத்துக்களை அமைச்சர்கள் கூறுவதாகவும் இந்தியாவைப் பற்றி கூறாமல் இருந்திருந்தால் நாட்டு மக்கள் இன்னும் வீதியில் திரிவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்