காவல்துறை உயர் கதிரைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (National Police Commission of Sri Lanka) அனுமதியுடன் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு உடன் நடைமுறையாகும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, நான்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருக்கே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இடமாற்றம்
இடமாற்ற விபரங்கள் பின்வருமாறு:
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார, நலன்புரி பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் (Kurunegala) பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஏ.ஜி.யூ.சி. ஹேரத், குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எஸ்.பி.கே. கால்லகே, மொனராகலை (Monaragala) பிரிவில் இருந்து நலன்புரி பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த, கேகாலை பிரிவில் இருந்து தம்புத்தேகம பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன, காவல்துறை தலைமையகத்தில் இருந்து மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
