களனி பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்: போராட்டத்தில் குதித்த சக மாணவர்கள்
களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று(25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் நேற்று (24.03.2024) இரவு திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுகயீனமடைந்த மாணவன்
இந்நிலையில், சுகயீனமடைந்த குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க நோயாளர் காவு வண்டி வசதியோ அல்லது வேறு வாகன வசதியோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தால் குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே, இதற்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடம் முன்பாக ஏறத்தாழ 150 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |