திடீரென குறைந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!
Srilanka
Shavendra Silva
Corona Deaths
By MKkamshan
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை14,127ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 556,437 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,734 ஆக அதிகரித்துள்ளது.