நாட்டில் சீனி கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் -விடுக்கப்பட்ட எச்சரிக்கை
srilanka
people
corona cluser
By Jaso
நாட்டில் சீனிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை அடுத்து அதனை கொள்வனவு செய்ய மக்கள் பெருமளவில் வியாபார நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.
இதனால் சீனி கொவிட் கொத்தணி நாட்டில் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக அபயராம விகாராதிபதி முருத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சீனி கொள்வனவுக்காக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக, மக்கள் வரிசையில் நிற்கின்றமையினால், சீனி கொவிட் கொத்தணியொன்று உருவாகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் முதலாம் அலையில் ஆடைக் கைத்தொழிற்சாலையில் பெருமளவு ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியதை அடுத்து அது ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணி என அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.