இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் பாரிய நிலச்சரிவு : பலரை காணவில்லை
இந்தோனேசியாவில் (Indonesia) சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெரியவருகையில், சுலவேசி (Sulawesi island) தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
மண் சரிவு
அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்ததில்12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டுள்ளனர்
மேலும், விபத்தில் சிக்கிய 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |