யாழில் அநுர வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து: ஆதரிக்கும் சுமந்திரன்

Jaffna Anura Kumara Dissanayaka M. A. Sumanthiran Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024
By Shadhu Shanker Sep 08, 2024 04:43 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் (Jaffna) இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka)பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும், ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அரியநேத்திரன் அதிரடி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அரியநேத்திரன் அதிரடி

வடபகுதி மக்கள்

அவர் இந்த சொற்களை பயன்படுத்தி இதனை தெரிவித்தவேளை பலர் உடனடியாக இது கோட்டாபயராஜபக்சவின் கூற்றை நினைவுபடுத்துகின்றது என தெரிவித்தனர்.

யாழில் அநுர வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து: ஆதரிக்கும் சுமந்திரன் | Sumanthiran Defends Anuras Jaffna Speech

அனுராதபுரத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச நான் அனைவரும் எனது வெற்றியின் பங்குதாரர்களாகயிருக்கவேண்டும் என விரும்பினேன், ஆனால் வடபகுதி மக்கள் இந்த வெற்றியில் என்னுடன் இணைந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

வடபகுதி மக்களிற்கு அவ்வேளை உணர்வொன்று காணப்பட்டது, அது சரியானது என நிரூபிக்கப்பட்டது ஏனென்றால் கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்த தென்பகுதி மக்களே அவரை துரத்தினார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்

ஊழல் அற்ற அரசாங்கம்

நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம்- விரும்புகின்றோம், 70 வருடங்களிற்கு மேலான ஆட்சிமுறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் கோருகின்ற மாற்றம் இல்லை.

யாழில் அநுர வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து: ஆதரிக்கும் சுமந்திரன் | Sumanthiran Defends Anuras Jaffna Speech

நாங்கள் அந்த மாற்றத்தினையும் கோருகின்றோம். ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம்.

நாங்கள் அவருக்கு இந்த விடயத்தில் முழுமையாக ஆதரவை வழங்குகின்றோம், ஊழலை ஒழிப்பதில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.இது குறித்து எந்த கேள்வியும் இல்லை.

அநுர குமாரவிற்கு திடீர் சுகவீனம்

அநுர குமாரவிற்கு திடீர் சுகவீனம்

இனவாத உணர்வுகள் 

வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், வெவ்வேறு மொழிகளை வசிக்கின்ற மக்கள், அவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தவர்களாகயிருக்கலாம் ஆனால், அவர்களிற்கும் அரசாங்க அதிகாரங்களிற்கான சமமான அணுகல் காணப்படும் மாற்றத்தை விரும்புகின்றோம்.

யாழில் அநுர வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து: ஆதரிக்கும் சுமந்திரன் | Sumanthiran Defends Anuras Jaffna Speech

இதுவே உண்மையான மாற்றமாகயிருக்கும். அநுரகுமார இனவெறி உணர்வுகளுடன் இந்த கருத்தினை வெளியிட்டார் என நான் கருதவில்லை, அவரை எனக்கு நன்கு தெரியும், அவர் இனவாத உணர்வுகள் அற்ற மனிதர்,அவர் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் எங்களிற்கு வேறு உணர்வுகள் வித்தியாசமான உணர்வுகள் இல்லை. நாங்கள் வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கலாம் ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் இணைந்திருக்கலாம்.” என்றார்.

சஜித்தை ஆதரித்த சுமந்திரனுக்கு ரணில் வழங்கிய பரிசுத்தொகை!

சஜித்தை ஆதரித்த சுமந்திரனுக்கு ரணில் வழங்கிய பரிசுத்தொகை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022