வடக்கு ஆளுநரை சந்தித்த சுமந்திரன்
M A Sumanthiran
Northern Province of Sri Lanka
P. S. M. Charles
By Pakirathan
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்றையதினம் (12) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பு
இந்த சந்திப்பில், வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வட மாகாணத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள திருமதி. சார்ள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இடையில் முதல் தடவையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.