கோட்டாபய கொண்டுவந்த அவசரகால விதிமுறைகளின் பின்னால் கபட எண்ணங்கள் - நாடாளுமன்றத்தில் அம்பலத்திற்கு வந்த தகவல்கள்
அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் கபடமான எண்ணம் இருப்பது புலப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வெளியிட்ட அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அவசரகால நிலைமை பிரகடன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் ஜனாதிபதியால் அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும். இந்த நிலையில், ஜனாதிபதியால் அந்த அவசரகால சட்டங்கள் கொண்டுவரப்படும்போது நாடாளுமன்றத்தினால் அதனை கேள்விக்கு உட்படுத்த முடியாது.
அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் கபடமான எண்ணம் இருப்பது புலப்படுகிறது.
நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும் அவற்றினை இப்பிடியாக செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.