மக்களை திசை திருப்பும் சுமந்திரன்: தமிழரசுக்கட்சி மீது ஏற்பட்டுள்ள விரக்தி
பௌத்த சிங்கள அரசிற்கு எது தேவையோ அதனை சரியாக வடக்கில் செயல்படுத்த முக்கிய பங்காற்றியவர் சுமந்திரன் (M. A. Sumanthiran) என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா (K.V.Thavarasa) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியிலிருந்து தற்போது வரை பலர் விலகியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் விலக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றே கூற வேண்டும்.
தமிழரசு கட்சியின் மத்திய குழு சுமந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எவருக்கும் கட்சியை பற்றியோ தமிழரசுகட்சியின் கொள்கை பற்றிய கவலையும் இல்லை, தமிழ் தேசிய பற்றும் இல்லை. மேலும், மாற்றம் வர வேண்டும் என்பதற்காக மாற்றானுக்கு வாக்களிப்பது ஒரு வரலாற்று தவறு.
பெரும்பான்மையிலிருந்து யார் ஆட்சிக்கு வந்தாலும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க மாட்டார்கள்.” என்றார்.
இது தொடர்பான முழுமையான தகவல்கள்ளை கீழுள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |