இந்தியாவின் திரவ உர இறக்குமதியில் முறைகேடுகள்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ உர இறக்குமதியில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் குறித்த இறக்குமதிக்கான நிதி மத்திய வங்கியின் திறைச்சேரி ஊடாக வழங்கப்பட வேண்டும்.
ஆனால் நிதி ஒரு தனியார் வங்கி வைப்பின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை அரசாங்கம் மூடி மறைக்கிறது எனவும் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் பிணைமுறி மோசடியாளர்களை தண்டிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கம் இரண்டாண்டுகள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening