விண்வெளியில் இருந்து வந்த தீபாவளி வாழ்த்து
விண்வெளியில் இருந்தவாறே பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) தீபாவளி வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து தீபாவளி கொண்டாட்டங்களைக் கண்டுகளிக்கவிருப்பது குறிப்பிடத்தக்க அனுபவமாக இருக்குமென சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறே அவர் உற்சாகத்துடன் பேசியுள்ளார்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறே அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “இன்று வெள்ளை மாளிகையிலும், உலகம் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் தித்திப்பான தீபாவளியாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஜோ பைடனுக்கும் கமலா ஹாரிஸுக்கும் நன்றி
நல்ல விஷயங்கள் நிலைத்திருக்கும் சூழலில், தீபாவளி மகிழ்ச்சிக்கானதொரு கொண்டாட்டம். இந்த சிறப்பான தருணத்தை எங்கள் சமூகத்துடன் இணைந்து இன்று கொண்டாடியதற்கும், எங்களது பலவிதமான பங்களிப்பை அங்கீகரித்ததற்காகவும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் நன்றி!” எனப் பேசியுள்ளார்.
பெப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள்
அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ்(59) மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஜூன் 5-ஆம் திகதி அடைந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
இந்த நிலையில், சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |