மஸ்க்கின் மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஒப்பந்தமொன்றை சுனிதா வில்லியம்ஸ் (Sunitha Williams) நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் இம்மாத இறுதியில் பூமிக்கு திரும்பவுள்ள நிலையில், அவர்களை பத்திரமாக அழைத்து வர பணிகளை நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், சர்வதேச விண்வெளி நிலையத்தை திட்டமிட்டதை விட முன்னதாகவே சுற்றுப்பாதையில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் 2030 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே அதனை செய்ய வேண்டுமெனவும் எலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.
மில்லியன் டொலர்கள்
இதற்கு உதவிட எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு 800 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தைப் பெற்றது.
இந்தநிலையில், சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் மஸ்க்கின் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
அத்தோடு, தொடர்ந்து கருத்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ், "நாங்கள் இப்போது எங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம்.
சரியான நேரம்
இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது, இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எங்களிடம் அனைத்து சக்திகளும், அனைத்து வசதிகளும் உள்ளன அவை செயல்பட்டு வருகின்றன.
எனவே இப்போது அதை நிறுத்துவதற்கு சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
