யாழ்ப்பாணத்திற்கான ‘யாழ்நிலா’அதி சொகுசு சேவை ஆரம்பம்
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lanka Railways
By Sumithiran
கல்கிசையிலிருந்து காங்கேசன்துறைக்கான ‘யாழ் நிலா’சுற்றுலா ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் நேற்று (04) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு

எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவில் மகோற்சவ திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த ரயில் சேவை நடத்தப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினமும் ரயில் சேவை ஒன்றை ஆரம்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் பந்துல குணவர்தனவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி