யாழில் திருட்டு - வெளியானது சி.சி.டி.வி காட்சிகள் (காணொளி)
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கைதடி சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (16) இரவு சுப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணம், குளிர்பான வகைகள் மற்றும் பால் மா பொதிகளை திருடிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சி.சி.ரி.வி காட்சி
மேற்படி திருட்டுக் காட்சி அங்கிருந்த பாதுகாப்பு கமராவில்(சி.சி.ரி.வி) பதிவாகியுள்ள நிலையில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி