காவல்துறை தலைமையகத்தின் நிர்வாக பணிப்பாளராக பெண் காவல்துறை அதிகாரி!..
Police
Colombo
SriLanka
Lanka Rajini Amarasena
By Chanakyan
சிரேஷ்ட பெண் காவல்துறை அத்தியட்சகர் லங்கா ராஜினி அமரசேன (Lanka Rajini Amarasena) காவல்துறை தலைமையகத்தின் நிர்வாக பணிப்பாளர் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இப்பதவிக்காகப் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனக் காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் இதற்கு முன்னர் காவல்துறை தலைமையகத்தின் மேலதிக நிர்வாகப் பணிப்பாளராக கடமையாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.