மந்திராலோசனையில் அரசின் பங்காளிக் கட்சிகள் : நாளை வெளிவரவுள்ள தீர்க்கமான முடிவு
budget
meeting
basil rajapaksa
slpp
partner
By Vanan
வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து பங்காளிக் கட்சிகள் மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, ஆளும் அரசாங்கத்திற்குள் மாற்றுக் கருத்துக்களை கொண்டுள்ள 11 சிறு கட்சிகள், நாளை 15ஆம் திகதி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வீட்டில் மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் குறித்து ஆராயவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இக்கூட்டத்திலேயே வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்ற தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.