குருநகர் கொலையுடன் தொடர்புடைய மூவர் நீதிமன்றில் சரணடைவு

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kiruththikan May 05, 2022 02:02 AM GMT
Report

குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்.

மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்பபாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி பட்டப்பகலில் குருநகரில் வீதியில் வைத்து ஜெரன் (வயது-24) என்பவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவ தினத்தன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , மோட்டார் சைக்கிளில் வந்த மற்றோரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர்களான ரெமி மற்றும் அவரது சகோதர்களைத் தேடி தீவகம் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் தேடுதல் நடத்தினர்.மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

9 நாள்களின் பின்னர் 6 பேர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் உள்பட 14 பேர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் முதன்மை சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவரான ரெமி தலைமறைவாகியிருந்தார்.

சுமார் 8 மாதங்களின் பின் ரெமி உள்ளிட்ட மூவர் தமது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்.

சந்தேக நபர்கள் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. அதனை நிராகரித்த நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபர்களை மறு தவணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, கொல்லப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர் 

ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025