இலங்கையின் எதிர்காலம் குறித்து போலியான கதை - கடுமையாக விமர்சிக்கும் பிரீஸ்

G. L. Peiris Ranil Wickremesinghe Sri Lanka
By Vanan Aug 01, 2023 05:27 AM GMT
Report

இலங்கையில் அடுத்த நாள் உயிருடன் இருப்பதையே கேள்விக்குறியாக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், 2048 ஆம் ஆண்டு இலங்கையின் எதிர்காலம் குறித்து போலியான கதைகளை கட்டுவதாக சுயாதீமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவான சுதந்திர மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ், நாட்டின் அதிகாரத்தை அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வெளியிட்ட கருத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான நடவடிக்கை

இலங்கையின் எதிர்காலம் குறித்து போலியான கதை - கடுமையாக விமர்சிக்கும் பிரீஸ் | Surviving Next Day In Sri Lanka Is Questionable

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம், அதிபர் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இன்னும் 365 நாட்களே உள்ளன. அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.

தேர்தல் காலம் தற்போது ஆரம்பமாகவுள்ளது. தற்போதுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மேலும் 12 ஆண்டுகள் அதிகாரத்தை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நேற்றுமுன்தினம் குறிப்பிட்டிருந்தார்.

வீழ்ச்சி கண்டிருந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை ரணிலும் அவரின் அரசாங்கமும் மீட்டெடுத்து அதியசத்தை நிகழ்த்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவருக்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். எனினும் இது முற்றுமுழுதாக மாயை. நூற்றுக்கு நூறு வீதம் மாயை. இதில் எந்தவொரு உண்மையும் இல்லை.

இன்று மக்கள் படும் துன்பம் போன்று இதற்கு எமது வரலாற்றில் எப்போதும் மக்கள் எதிர்கொள்ளவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் இன்று துன்பத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மக்களின் அபிப்பிராயம்

இலங்கையின் எதிர்காலம் குறித்து போலியான கதை - கடுமையாக விமர்சிக்கும் பிரீஸ் | Surviving Next Day In Sri Lanka Is Questionable

இந்த அரசாங்கத்தின் கொள்கை காரணமாகவே மக்கள் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது ஆரம்பமாகியுள்ள தேர்தல் காலத்தில், மக்களின் அபிப்பிராயம் என்பது, தற்போது இருக்கும் தலைமை மற்றும் அவர் தலைமையிலான அரசின் கொள்கையை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஆணை வழங்க வேண்டும் என்பது அல்ல.

இதனை முடியுமான விரைவில் தடுத்து நிறுத்துவதற்கு, இந்த சாபத்தை முடிவுக்கு கொண்டுவந்து, மக்களின் அபிலாரஷகளை பூர்த்தி செய்ய கூடிய புதிய அரசை அதிகாரத்தில் அமர்த்துவதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” - என்றார்.



ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025