ராஜபக்சர்களுக்கு தலையிடியாக மாறிய சுசில்!! மஹிந்த உட்பட 54 பேருக்கு ஆப்பு
ராஜபக்சர்கள் சிங்கள பௌத்த வாக்குகளால் மீண்டும் வெல்ல முடியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
அண்மையில், ராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து பதவி நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் எதிர்கால அரசியல் தொடர்பிலும், அரசுக்கெதிரான ஒரு கிளர்ச்சிக் குழுவை அவர் உருவாக்குவதில் முன்னிற்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் தனது கடந்தகால - எதிர்கால அரசியல் பயணங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
குறித்த நேர்காணலில் மேலும் பகிர்வுகளை வழங்கிய அவர்,
“தான் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து மாத்திரமே நீக்கப்பட்டுள்ளேன். எனினும் பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நான் இன்னும் விலகவில்லை. எனவே அந்தநிலை வந்தால், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்.
“ஞாபகம் இருக்கட்டும்” மஹிந்த ராஜபக்ஷ உட்பட 54 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், வெற்றிலைச் சின்னத்தின், கீழ் எனது கையொப்பத்துடன் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செய்யப்பட்டனர்.
எனினும் 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொட்டுச் சின்னத்தைக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டார்கள். அரசியலமைப்பின்படி, ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் போது வேறு கட்சியின் உறுப்பினர் நிலையை பெற்றுக்கொள்ள முடியாது. இது விசாரணை இன்றி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.
நான் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணையப்போவதாக பரவலாக பேசப்படுகிறது. அவரைப் பொறுத்தவரையில் பிரதான அரசியலில் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை. இதற்கான உயர்மட்ட பேச்சுக்களும் இதுவரை இடம்பெறவில்லை” என்றார்.