பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் அதிரடி கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12-போர் ரக துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு மற்றும் ஆறு BMG ரக தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கந்தநெகெதரவின் வலக்கும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் குளியாபிட்டிய, வலக்கும்புரமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |