பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை - முன்னாள் இராணுவ வீரர் அதிரடியாக கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital - Anuradhapura) வைத்தியர் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இன்று (12.03.2025) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, இன்று (12.03.2025) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பெண் வைத்தியர் கத்தி முனையில் தவறான முறைக்குட்படுத்திய சம்பவத்திற்கு நீதி கோரியும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் இச்சம்பவத்திற்கு எதிரான கண்டனமாகவும் GMOA இந்த பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.
மேலும், இது போன்ற சம்பவங்கள் வைத்தியர்களுக்கு, குறிப்பாக பெண் வைத்தியர்களுக்கு பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துவதாகவும், அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் GMOA வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்