வெளிநாட்டு கைக்குண்டுடன் திருகோணமலையில் ஒருவர் கைது
arrest
police
suspect
trincomale
hand grenade
By Sumithiran
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் திருகோணமலை பூவரசந்தீவு பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சந்தேக நபர் நேற்று (ஒக். 19) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிண்ணியா, பூவரசந்தீவைச் சேர்ந்த 29 வயதானவராவார்.
சந்தேக நபர் இன்று (ஒக். 20) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் மேலும் கிண்ணியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.