பேராதனை பல்கலைக்கு அருகில் மீட்கப்பட்ட மனித கருவின் பாகங்கள்
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகில் மனித கரு என சந்தேகிக்கப்படும் பாகங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திலுள்ள விஜேவர்தன மகளிர் விடுதிக்கு அருகில் இந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள்
விஜேவர்தன மண்டபத்தின் அதிகாரி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (07) பேராதனை காவல்துறையினரிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருவைப் போன்ற பாகங்களைக் கண்டறிந்த பின்னர், அந்த பாகங்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரிவு விசாரணை
இதனையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கு அமைய காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேராதனை காவல் நிலைய குற்றப்பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |