எரிபொருள் நிலையங்களின் விதி மீறல்: எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்
Fuel Price In Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தானத்தின் விதிகள், ஒழுங்குமுறைகளை மீறியதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும், வாகனங்களுக்கான எரிபொருள் அளவு உத்தரவை சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீறுவதாக முறைபாடு கிடைத்துள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாகொல தெற்கு, நால்ல, களனியின் பேத்தியகொட, மீரிகம ஆகிய இடங்களிலுள்ள 4 எரிபொருள் நிலையங்களுக்கான விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று 19ஆம் திகதி முதல் இத்தீர்மானம் அமுலுக்கு வருவதாக இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்