விசா பெற இனி புதிய கட்டுப்பாடுகள் : சுவீடன் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
தற்போது சுவீடன் அரசாங்கம் தங்கள் நாட்டில் குடியேற நினைக்கும் அனைத்து அயல்நாட்டினருக்கும் புதிய சட்டதிட்டங்களை வகுக்க உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு கடவுசீட்டு இல்லாமல் எல்லைகளை தாண்டி செல்ல ஒரே விசா முறையான ஷென்கன் விசா (Schengen Visa) நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் (Sweden) நாடும் அங்கீகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தன் நாட்டில் குடியேற விரும்புவோருக்கான சில சட்டத்திட்டங்களை அந்நாட்டின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து சுவீடனின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை தெரிவிக்கையில்,
விரைவு பரிசீலனை முறை
சுவீடனில் தங்க விரும்புபவர்கள் இங்கு தாங்களாகவே வேலையை தேடி கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரும் அரசாங்க உதவி இல்லாமல் தங்களை தேவைகளை தாங்களே பார்த்து கொள்ள முடியும்.
சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூக குறியீடுகளை குறித்த புரிதல் இருக்க வேண்டும் என்பதும் இனி கட்டாயம்.
சுவீடன் நாட்டு மொழியான சுவீடிஷ் (Swedish) மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர்.அதற்காக ஒரு தேர்வு நடத்தப்படும்.
இங்கு தங்கி பணியாற்ற விரும்புபவர்கள் ஒவ்வொருவரின் சமுதாய புரிதல் குறித்து ஒரு ஆய்வாளரின் அறிக்கை பெறப்படும்.
இங்கு கல்வி கற்று, பிறகு வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப்படும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சில தினங்களுக்கு முன், ஃபாஸ்ட் டிராக் (fast track) எனப்படும் "விரைவு பரிசீலனை" முறையில் வழங்கப்பட்டு வந்த விசா வழங்கலை சுவீடன் நிறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |