இலங்கை திரும்பிய சுவிஸ் தூதுவருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!
இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் வீட்டிலிருந்து சுமார் ரூ.4.5 மில்லியன் மதிப்புள்ள தங்க மோதிரங்கள், இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிஸ் தூதவர் நேற்று (29) கொள்ளுப்பிட்டி காவல்துறையில் அளித்த முறைப்பாட்டின் படி, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான சுவிஸ் தூதுவருக்கு கடந்த 12 ஆம் திகதி சென்று 27 ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளார்.
மேலதிக விசாரணை
அதன்போது, அவரது ஊழியர்கள் 5 பேர் பணியில் இருந்ததாகவும், அவர்களிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த வைர மோதிரம், இரத்தினக் கல் கொண்ட மோதிரம், வெள்ளைத் தங்க அடித்தளத் தகடு, தங்கத் திருமண மோதிரம், ரூபி கல் கொண்ட தங்க மோதிரம், தங்கப் பதக்கம், சபையர் கற்கள் கொண்ட ஒரு ஜோடி தோடு, ஒமேகா லேடிமேடிக் கடிகாரம், ஒமேகா தங்கக் கடிகாரம் மற்றும் பிற தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தூதுவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு தெற்குப் பிரிவின் பொறுப்பான மூத்த காவல் கண்காணிப்பாளர் லூசியன் சூரியபண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், கொள்ளுப்பிட்டி காவல்துறையின் பொறுப்பதிகாரி லலித் சிலோகம தலைமையிலான அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
