இலங்கை தழிழருக்காக சுவிஸில் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல்
இலங்கை (Sri Lanka) தழிழர் ஒருவருக்காக சுவிஸ் (Switzerland) சட்டத்தரணிகள் இழப்பீடு கோரி வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்கள்.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திரும்பிச் சென்று 2022 ஆம் ஆண்டு மீண்டும் சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்பட்ட தழிழர் ஒருவருக்காகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிக்கான செயற்திட்டம்
பீற்றர் மோறோ எஸ் ஏ என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எமா லைடென் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் ஆகியோர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்துடன் இணைந்து குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கானது சுவிட்சர்லாந்து தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்குப் பலவந்தமாக திருப்பி அனுப்புவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனவும் துன்புறுத்தலின் நிரூபிக்கப்பட்ட முழுமையான ஆயத்தினைக் கருத்திற் கொண்டு நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் சுவிட்சர்லாந்தினைக் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




