வட மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு சுவிஸ் பூரண ஆதரவு வழங்கும் - ஒலிவர் பிரஸ்
Northern Provincial Council
Switzerland
P. S. M. Charles
By Sathangani
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ்லாந்து அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை கடந்த 23ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கின் அபிவிருத்தி

இக்கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடக்கு மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வடமாகாணத்தில் தற்போது முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் குறித்து ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவருக்கு விளக்கமளித்தார்.