மதுரோவுக்கு விழுந்த அடுத்த அடி...! அதிரடியாக முடக்கப்பட்ட சொத்துக்கள்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்கி உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி அந்நாட்டு படைகளால் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி சிலியா புளோரஸ் சிறை பிடிக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
சுவிட்சர்லாந்து அரசு
இந்தநிலையில், நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நிக்கோலஸ் மதுரோ அல்லது அவருடன் தொடர்புள்ளவர்கள் சுவிட்சர்லாந்தில் வைத்திருக்கும் எந்தவொரு சொத்தையும் உடனடியாக முடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சொத்து முடக்கம்
சொத்து முடக்கம் உடனடியாக இன்று முதல் முடக்கத்துக்கு வந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு நான்கு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ஏதேனும் சொத்துகள் சட்ட விரோதமானவை என்று தெரிய வந்தால் அவை வெனிசுலா மக்களுக்கு பயன்படும் வகையில் சுவிட்சர்லாந்து அரசு தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் சட்ட விரோதமாக சம்பாதித்த எந்தவொரு சொத்தையும் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புகின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பதவிகளை வைத்துக்கொண்டு கட்சிக்கு சேறுபூசும் நடவடிக்கை : முன்னாள் எம்பி சிவமோகன் குற்றச்சாட்டு!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |