லண்டனில் பட்டப்பகலில் வாள் வெட்டு தாக்குதல் - சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியான இளைஞன்
London
Crime
Death
By Jaso
பட்டப்பகலில் வாள்வெட்டு தாக்குதல்
சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 18 வயதேயான குலாம் சாதிக் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

நான்கு நாட்களில் ஐவர் படுகொலை
தலைநகர் லண்டனில் இஸ்லிங்டனில் உள்ள பூங்கா ஒன்றில் வியாழக்கிழமை 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டநிலையில் அந்த கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மற்றொரு சம்பவமாக இது பதிவாகி உள்ளது.
இதேவேளை கடந்த நான்கு நாட்களில் மட்டும் லண்டன் நகரில் வாள்வெட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்களிடம் காவல்துறை விடுத்த கோரிக்கை
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும்,தாக்குதலில் ஈடுபட்ட குழு தொடர்பில் தகவல் அறிந்த மக்கள் விசாரணை அதிகாரிகளை நாடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி