பிரான்சில் வாள்வெட்டு சம்பவம்: படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழன்!
Sri Lankan Tamils
Sri Lanka
France
By pavan
பிரான்ஸ் பரிஸ் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இரண்டு ஈழ தமிழர்கள் இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (22) அதிகாலை பரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 24 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் 30 வயதான மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வாள்வெட்டு தாக்குதலானது இரு குழுக்களுக்கிடையிலான பழிவாங்கும் நோக்கத்தில் இடம்பெற்றிருக்க கூடும் என பரிஸ் குற்றவியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த தாக்குதலுக்கான நோக்கத்தை இதுவரை துல்லியமாக கண்டறியவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான புலனாய்வுகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்தி வீச்சு

மரண அறிவித்தல்