20 ஓவர் போட்டியில் 427 ஓட்டங்களை குவித்து உலக சாதனை
ரி 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 427 ஓட்டங்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளது ஆர்ஜன்ரீனா மகளிர் அணி. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் இந்த ஓட்டங்களில் எந்த வொரு சிக்ஸரும் பெறவில்லை என்பதே சிறப்பு.
ஆர்ஜன்ரீனாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சிலி அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி, நடந்து முடிந்துள்ளது.
427 ஓட்டங்களை குவித்து வரலாறு படைத்தது
இதில், முதலில் களமிறங்கிய ஆர்ஜன்ரீனா அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 427 ஓட்டங்களை குவித்து வரலாறு படைத்துள்ளது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்ஜன்ரீனா மகளிர் அணியில் லூசியா டெய்லர் 84 பந்தில் 169 , அல்பர்ட்டினா காலென் 84 பந்துகளில் 145 ஓட்டங்களை அடித்தனர். இறுதிக் கட்டத்தில், மரியா 16 பந்தில் 40 ஓட்டங்களை விளாசினார்.
படுதோல்வியடைந்த சிலி
இதெல்லாம், 400 ஓட்டங்களை அடிக்க உதவவில்லை. சிலி மகளிர் அணியினர் 64 நோபோல்களை வீசினார்கள். இதனால்தான், ஆர்ஜன்ரீன அணியால் 427 ஓட்டங்களை குவிக்க முடிந்தது.
இலக்கை துரத்தக் களமிறங்கிய சிலி அணியில், ஜெசிகா 27 (29) மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை அடித்தார். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால், சிலி அணி 15 ஓவர்களில் 63/10 ஓட்டங்களை சேர்த்து, 364 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.