நிறுவனமொன்றுக்குள் T-56 துப்பாக்கியை வீசிய மூவர்! நீதிமன்றின் உத்தரவு
தனியார் நிறுவனத்தில் T-56 துப்பாக்கியை வீசிய சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை ஜனவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌசல்யா உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, மூன்றாவது சந்தேக நபரை இன்று(29) நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிசிரிவி காட்சி ஆய்வு
நீதிமன்றத்திற்கு தகவல் அளித்த காவல்துறையினர், கடந்த 24 ஆம் திகதி தனியார் நிறுவனத்தில் T-56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மூன்று நபர்கள் துப்பாக்கியை வளாகத்திற்குள் வீசியதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |