உள்நாட்டு பொறிமுறைகளால் எவ்விதமான நியாயங்களும் கிடைக்காது : சிரேஷ்ட சட்டத்தரணி உறுதி

T saravanaraja Ministry of justice Sri lanka
By Beulah Oct 01, 2023 12:46 AM GMT
Report

இலங்கை வரலாற்றில் நீதிபதி ஒருவர் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு பதவிநிலைகளை தூக்கியெறிந்து நாட்டை விட்டு வெளியேறியிருப்பதையிட்டு அரசாங்கம் வெட்கித் தலை குனிய வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நீதித்துறையை ஆட்டம் காண செய்த நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல்: சிறீதரன் கடும் கண்டனம்

நீதித்துறையை ஆட்டம் காண செய்த நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல்: சிறீதரன் கடும் கண்டனம்

சர்வதேச விசாரணை

“உயிரச்சுறுத்தல், அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சம்பந்தமாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஊடகங்களுக்கு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு பொறிமுறைகளால் எவ்விதமான நியாயங்களும் கிடைக்காது : சிரேஷ்ட சட்டத்தரணி உறுதி | T Saravanaraja Resing Senior Advocate Ks Ratnavel

அவருடைய கருத்தின் பிரகாரம், நீதிபதி வாகனத்தை விற்பனை செய்தமை, தூதுவர்களைச் சந்தித்தமை போன்ற செயற்பாடுகள் ஊடாக நீதிபதி திட்டமிட்ட வகையில் தான் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக காண்பிப்பதற்கு முயல்கின்றார்.

அத்துடன், நீதிபதிக்கு அச்சுறுத்தல் காணப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடுகளை செய்யவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரங்கள் இருப்பதாகவும் கூட நீதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

அவ்வாறான நிலையில், நீதிபதி சரவணராஜா கொழும்புக்கு வருகை தந்தமை, அவர் வாகனத்தை விற்பனை செய்தமை, தூதுவர்களை சந்தித்தமை உள்ளிட்ட விடயங்கள் சாதாரணமானவை.

மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் : சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் : சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

நாட்டில் வாழ முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றபோது, பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை எடுக்கின்ற ஒரு சதாரண நபர் கூட இவ்விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வார்.

இந்நிலையில், நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சரவணராஜா நிச்சயமாக அமைதியான முயையில் தனது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், நீதியமைச்சரின் கூற்றானது மற்றொரு விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதே அந்த விடயமாகும்.

குருந்தூர்மலை விவகாரத்தில் முக்கியமான தீர்மானங்களை அறிவித்த அவரை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்குள்ளும், வெளியிலும் அச்சுறுத்தினார்கள்.

அதனோடு, அவர் புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டும் வந்தார். அதற்கான தகவல்களும் உள்ளன.

இவ்வாறான நிலையில் நீதியமைச்சரின் கூற்று அந்த விடயங்களுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக காணப்படுகின்றது.

இவ்விதமான நிலைமையில் உள்ள ஒரு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதும், அதியுச்சமான அழுத்தம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதவொரு விடயமாகும்.

அதுமட்டுமன்றி, புலனாய்வாளர்களே அவரைப் பின்தொடர்கின்றபோது, காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்வதானது, திருடனின் தயாரிடம் திருடன் குறித்து வெற்றிலைச் சாத்திரம் கேட்பதற்க ஒப்பானதாகும்.

ஆகவே, இலங்கை நீதித்துறையின் நீதிபதி ஒருவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியமைக்காக அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மேலும், உள்நாட்டு பொறிமுறைகளால் எவ்விதமான நியாயங்களும் கிடைக்காது என்பதும் உறுதியாகிவிட்ட நிலையில் சர்வதேச ரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையின் நியாயம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.” என்றார்.

கனேடிய பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்

கனேடிய பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024