இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியான நிலையில் உள்ளது : சிவநேசன்

Sri Lanka T saravanaraja
By Beulah Oct 01, 2023 02:32 AM GMT
Report

இலங்கையின் நீதித்துறை இன்று மிகவும் ஒரு கேள்விக்குறியான விடயத்தில் வந்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்  தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்தியாவின் அடுத்த மிஷனும் வெற்றிகரம்! இஸ்ரோவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்தியாவின் அடுத்த மிஷனும் வெற்றிகரம்! இஸ்ரோவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையின் நீதித்துறை

“இலங்கையின் நீதித்துறையினை பொறுத்தமட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் இலங்கையின் வரலாற்றில் நீதித்துறையில் சார்பு நிலை என்பது நீண்டகாலமாக பேரினவாத சக்திகளால் பல வழிகளிலும் நீதித்துறைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியான நிலையில் உள்ளது : சிவநேசன் | T Saravanaraja Resing Sivakaneshan Sl

பேரினவாத சக்திகள் தங்களுக்கு சார்பான தீர்ப்பு வரவேண்டும் என்பதிலே பல வழிகளிலும் நீதிதுறையினை அழுத்தத்திற்கு உட்படுத்தி இருக்கின்றது வெளிப்படையான விடயம்.இன்று அது உச்ச கட்டமாக இருக்கின்றது.

ஒரு நீதிபதியின் பெயரினை உச்சரிப்பது கூட நீதியினை மதிக்கின்ற சமூகத்தில் நாங்கள் இருக்கின்றபடியால் தயக்கமாக இருக்கின்றது. இன்று அவர் பதவி விலகி இருக்கின்றார் என்பதை இலங்கையில் இருக்கின்ற ஜனநாயக ரீதியாக சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

இது இனரீதியாக பார்க்கக்கூடிய விடயமல்ல இலங்கையின் நீதித்துறை இன்று மிகவும் ஒரு கேள்விக்குறியான விடயத்தில் வந்திருக்கின்றது.

ஒரு நீதிபதி தன்னுடைய தீர்ப்பினை நியாயமான முறையில் தெரிவிப்பதில் கூட அழுத்தங்கள் பிரயோககிக்கப்படுகின்றது என்றால் இதனை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

இன்று அதிபர் உலகரீதியாக வலம் வந்து ஜனநாயத்தினை பேசிவரும் காலகட்டத்தில் இலங்கையில் தன்னுடைய ஆட்சிக்கு கீழ் இருக்கின்ற நீதிபதி தனக்கு நீதி வழங்கியதற்காக அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்காக பதவியில் இருந்து விலகியது மாத்திரமில்லாமல் இங்கு இருக்கமுடியாமல் நாட்டை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்கவேண்டும்.

இது நியாயம் தானா இந்த நாட்டில் நீதி இருக்கின்றதா? ஆகவே மிக நீண்டகாலமாக தமிழ்மக்கள் இந்த அளவிற்கு நீதிதுறையால் மாத்திரமல்ல நாட்டிலுள்ள நடைமுறையாக்க பிரிவினால் அனைத்தினாலும் தமிழ்மக்களுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகித்துக்கொண்டுவருவது நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது அதற்காக போராட்டங்கள் நடந்தது இதனால்தான் என்பதை இன்றாவது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது என்னுடைய கருத்து. 

இலங்கையின் வரி வருமான சேகரிப்புத் தளத்தை ஏன் விரிவாக்க முடியவில்லை : மகிந்தானந்த அளுத்கமகே

இலங்கையின் வரி வருமான சேகரிப்புத் தளத்தை ஏன் விரிவாக்க முடியவில்லை : மகிந்தானந்த அளுத்கமகே

திரிபோலி குழு

இன்று சணல்-4 கொண்டுவந்த விடயங்கள் வெளிப்படையான தன்மையாக தோன்றுகின்றது.

இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியான நிலையில் உள்ளது : சிவநேசன் | T Saravanaraja Resing Sivakaneshan Sl

திரிபோலி குழுஎன்ற ஒரு விடயத்தினை சொல்லியுள்ளார்கள் அதில் பல உண்மைகள் இருக்கின்றது. 

என்னுடைய இயக்க வாழ்க்கையிலும் கட்சி வாழ்க்கையிலும் சரி அவதானிப்புக்களை வைத்து பார்க்கின்ற போது திரிபோலி குழு என்பதை விட தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு குழுவினை பேரினவாத சக்திகளின் ஆளுகைக்கு உட்பட்டு நடைமுறையாக்க பிரிவுகளுக்குள் தொடர்ந்தும் பராமரித்து வருகின்றார்கள் என்பது உண்மை.

தமிழ்தேசிய தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பினை இல்லாமல் செய்வதற்கான ஒரு குழு மிக நீண்டகாலமாக பராமரித்து வருகின்றார்கள்.   பேரினவாத சக்திகள் எதனை நினைக்கின்றார்களோ அதனை செயற்படுத்துவதற்கு இவர்கள் நேரடியாக பங்கு பெற்றாமல் இயக்கங்களில் இருக்கின்றவர்கள் முரண்படுபவர்கள் போன்றவர்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்களை இயக்குகின்றார்கள்.

போர் முடிந்து மிக நீண்டகாலங்களுக்கு பிறகும் கூட இராணுவ முகாம்களில் இருந்து இந்த குழுவில் இருப்பவர்களுக்கு நிவாரணமாக கூட கொண்டு சென்று வழங்குகின்றார்கள்.

போரினவாத சக்திகளால் உருவாக்கப்பட்ட இந்த திரிபோலி குழு இருந்திருக்கின்றது என்பதில் உண்மை இருக்கின்றது. எங்கள் அவதானிப்பில் அது இன்றுவரை இருக்கின்றது.

ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவென்றால் இந்த குழுவில் சாதாரண உறுப்பினர்களை மட்டும் சேர்த்து வைத்திருக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் வரை பல தரப்பினரும் இந்த குழுவிற்குள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவர்களுடைய வேலை தமிழ்தேசிய பரப்பில் இருக்கின்றவர்கள் ஒருங்கிணைய நினைக்கின்றபோது அவர்களை பலவீனப்படுத்துவதுதான் முதன்மை நோக்கமாக இருக்கின்றது பிள்ளையன் குழுவும் அந்த குழுவினை சேர்ந்தவர்தான் இப்படியானவர்களை கொண்டு தமிழ்தேசியத்தினை பலவீனப்படுத்துவது தொடர்ச்சியாக காண்படுகிறது.

இந்த விடயத்தினை தங்கள் அரசியலின் தேவைக்காக பயன்படுத்தியவர்கள் மகிந்தராஜபக்ச கட்சிதான் என்பதும் கண்கூடானது.

நாடாளுமன்றத்தில் குழுவின் செயற்பாடு

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் பின்னர் கூட தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற பொது பதத்தின் ஊடாகத்தான் சர்வதேச சமூகத்தினை சந்தித்தது போன்ற விடயங்களில் ஒருங்கிணைந்து செயற்பட்டுள்ளார்கள்.

இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியான நிலையில் உள்ளது : சிவநேசன் | T Saravanaraja Resing Sivakaneshan Sl

இன்றைய காலகட்டத்தில் D-TNA யில் இணைந்த குழுக்கள் எல்லாம் சேர்ந்து தனிகுழுவாக செயற்படுவதாக தீர்மானித்துள்ளார்கள்.

அதற்கு மிக முக்கியமான காரணமாக செயற்படுவது கொள்கை என்பதை விட நாடாளுமன்றத்தில் நேர அட்டவணையில் நேரம் ஒதுக்குகின்றபொழுது தமிழரசு கட்சியின் பெயரில்தான் குழு ஒன்று பதியப்பட்டுள்ளது.

அதனால் நாடாளுமன்றில் நேரம் ஒதுக்குகின்றபொழுது தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் நேரத்தினை ஒதுக்கி கொடுப்பதும் D TNA யினை சேர்ந்தவர்களுக்கு நேரத்தினை ஒதுக்கி கொடுக்காத காரணத்தினால்தான் இப்போது அவர்கள் தனியான குழுவாக செயற்படவுள்ளார்கள்.

கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறிய பின்னர் அவர்கள் தனிப்போக்கில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் எங்கள் கருத்துக்கள் முரண்பாடான விடயங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்த சூழ்நிலையினை சரியான முறையில் கையாளவேண்டும் என்பதற்காக நாடாளுமன்றில் தனிக்குழுவாக செயற்படப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

தனிக்குழுவாக செயற்படவோம் என்பதற்காக தமிழ்தேசியப்பரப்பில் உள்ள பொதுவான விடையங்களில் இணைந்து செயற்படமாட்டோம் எனும் அர்த்தம் இல்லை.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020