இந்திய - வான்கடே மைதானத்தை கைப்பற்றிய நேபாள ரசிகர்கள்

England Cricket Team Nepal National Cricket Team T20 World Cup 2026
By Dharu Feb 09, 2026 12:59 PM GMT
Report

மும்பையில் நேற்று பிற்பகல் முழுவதும், வான்கடே மைதானம் இந்தியாவின் மேற்கு பெருநகரத்தை விட நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு நெருக்கமாகவே உணரப்பட்டிருக்க கூடும்.

இதில் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை 2026-இல் நேபாள அணி வலிமையான இங்கிலாந்தை எதிர்கொண்ட அந்தப் போட்டியில், ஆயிரக்கணக்கான நேபாள இரசிகர்கள் பாடி, ஆடி, கனவுகளுடன் தங்கள் அணியை உற்சாகப்படுத்திய தருணம் அது.

33,000 ரசிகர்கள் வரை பார்வையிடும் வசதியை உடைய அந்த புகழ்பெற்ற மைதானத்தின் ஒவ்வொரு மூலையும் சிவப்பு மற்றும் நீல நிற வர்ணங்களை அணிந்த ரசிகர்களால் நிரம்பியிருந்தது.

T20 உலக கிண்ணம் - முதல் போட்டியில் இலங்கை வெற்றி

T20 உலக கிண்ணம் - முதல் போட்டியில் இலங்கை வெற்றி

இங்கிலாந்து அணியிடம் தோல்வி

இந்தியாவின் அந்தச் சின்னமான மைதானம், நேபாள ரசிகர்களின் தற்காலிக இல்லமாக மாறியது.

இந்திய - வான்கடே மைதானத்தை கைப்பற்றிய நேபாள ரசிகர்கள் | T20 Wc Nepali Fans Take Over Wankhede Stadium

இந்த போட்டியில் நேபாளம் வெறும் 4 ஓட்டங்களால் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்திருந்தது.

எனினும் இந்த தோல்வியும் அவர்களது ஆட்டமும் விமர்சனங்களை தாண்டி பாராட்டு மழையால் நனைந்து கொண்டிருக்கிறது. இது அவர்களின் ஆட்டத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி.

இந்த போட்டி நேபாள ரசிகர்கள் கிரிக்கெட் மீது கொண்டுள்ள ஆர்வத்தை உலகுக்கு எடுத்துக்காட்டியது.

“Feel the Thrill” (உற்சாகத்தை உணருங்கள்) என்று எழுதப்பட்ட ஒரு பதாகை அரங்குகளை அலங்கரித்து.

முழு மைதானத்திலும் ஒலித்த கோஷங்கள், மேளத் தாளங்கள், நேபாள இசைகள் ஆகியவற்றின் மனநிலையைப் பிரதிபலித்தது.

முகத்தில் கொடிகள் வரையப்பட்டு வந்த குழந்தைகள் முதல் பாரம்பரியமான நேபாளி தொப்பியான தாகா தொப்பியை பெருமையுடன் அணிந்த முதியவர்கள் வரை, அனைத்து வயதினரும் இந்த நேபாள கலாச்சாரத்தில் நனைந்த கிரிக்கெட் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா

ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா

நேபாளத்திற்கு வெற்றி

மைதானத்தில், நேபாள வீரர்கள் சமீப காலத்தின் மிக நினைவுகூரத்தக்க ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தினர். ஆனால் கடைசி பந்தில் இலக்கு எட்டப்படாமல் போனதால், அந்தப் போட்டி இதயத்தை உடைக்கும் முடிவுடன் நிறைவடைந்தது.

இந்திய - வான்கடே மைதானத்தை கைப்பற்றிய நேபாள ரசிகர்கள் | T20 Wc Nepali Fans Take Over Wankhede Stadium

மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளுக்கு மத்தியில், இரு முறை சாம்பியன்களான இங்கிலாந்தை எதிர்கொள்ள நேபாளம் களமிறங்கியது.

அனுபவத்திலும் புகழிலும் உள்ள பெரும் இடைவெளியை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். ஆனால் தங்களின் பசி, தீவிரம் மற்றும் அச்சமற்ற ஆட்டம் போட்டியில் தங்களை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் விளையாடினர்.

185 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை துரத்திய நேபாள அணி, இணை உறுப்பினர் (Associate) கிரிக்கெட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணியாக தங்களை நிரூபித்தது.

லோகேஷ் பாம் கடைசியில் ஆடிய அதிரடி, ரோஹித் பௌடேல் மற்றும் தீபேந்திர சிங் ஐரீயின் ஆட்டங்கள் போட்டியை கடைசி பந்துவரை இழுத்துச் சென்றன.

நேபாளத்திற்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக போய்விட்டது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டம், வலிமையான அணிகளை நேபாளம் சவால் செய்த முதல் தருணமல்ல.

உலகக் கோப்பைக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, மேற்கிந்தியத் தீவுகளை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!

உலகக் கோப்பை

இது ஐ.சி.சியின் முழு உறுப்பினர் அணியை எதிர்த்து நேபாளம் பெற்ற முதல் இருதரப்பு தொடர் வெற்றியாகும். மேலும், 2024 டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை ஒரு ஓட்டத்தால் வீழ்த்த முடியாமல் தவறினர்.

இந்திய - வான்கடே மைதானத்தை கைப்பற்றிய நேபாள ரசிகர்கள் | T20 Wc Nepali Fans Take Over Wankhede Stadium

2014-ல் உலகக் கோப்பையில் அறிமுகமான நேபாளம், அப்போது மிகவும் மதிப்பிடப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

அரங்கில் இருந்த பலருக்கு, அந்தச் சூழலின் ஒரு பகுதியாக இருப்பதற்காக மேற்கொண்ட பயணங்களும் போட்டியைப் போலவே நினைவுகூரத்தக்கவையாக இருந்தன.

நேபாளத்தில் இருந்து பேருந்துகளில் குறித்த போட்டியை காண 3 தொடக்கம் 5 நாட்கள் பயணம் மேற்கொண்டு வருகைத்தந்த ரசிகர்களும் காணப்படுகின்றனர்.

இந்திய - வான்கடே மைதானத்தை கைப்பற்றிய நேபாள ரசிகர்கள் | T20 Wc Nepali Fans Take Over Wankhede Stadium

சில இந்திய ஊடகங்களில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நேபாள ரசிகர்கள், “இங்கே வர எடுத்த நேரமும் செலவும் எனக்கு முக்கியமல்ல.

உலகக் கோப்பையில் நேபாளம் விளையாடுவதை நேரில் பார்ப்பது என் வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு,” என்று தெரிவித்திருந்தனர்.

முழு ஐசிசி உறுப்பினர் அணிகளுக்கும் இணை அணிகளுக்கும் இடையே வித்தியாசம் இருந்தாளும் நேபாளத்தின் நேற்றைய ஆட்டம் அணைத்து கிரிக்கட் ரசிகர்களின் மனங்களில் பதிந்திருக்ககூடும். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
நன்றி நவிலல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026