ரி20 உலகக் கோப்பையில் புதிய சாதனையொன்றை படைத்த பேட் கம்மின்ஸ்

Dilakshan
in கிரிக்கெட்Report this article
பங்களாதேஷ் (Bangladesh) அணிக்கு எதிரான ரி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் அவுஸ்திரேலிய (Australia) அணி வீரர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா - பங்களாதேஷ் இடையிலான சூப்பர் 8 போட்டி இன்றைய தினம் (21) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி தலைவர் மிட்சல் மார்ஷ் பந்து வீச்சை தெரிவு செய்தார்.
ஹெட்ரிக் விக்கெட்
இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி தரப்பில் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
வாய்ப்பு
அதனையடுத்து, 18வது ஓவரை வீச பேட் கம்மின்ஸ் அழைக்கப்பட்டார், அதில் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், கம்மின்ஸ் ஓவர் முடிவுக்கு வந்தது.
அத்துடன், மீண்டும் கடைசி ஓவரை வீச கம்மின்ஸ் அழைக்கப்பட்டார். அதன் மூலம் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
