ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டிகள்: போராடி தோற்ற அமெரிக்க அணி
ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், அமெரிக்கா (USA), தென் ஆப்பிரிக்க (South Africa) அணிகளுக்கிடையிலான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நேற்று (19) சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, முதல் போட்டி அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை குவித்தது.
அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அமெரிக்க அணி
இதையடுத்து, அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டெய்லர் - ஆண்ட்ரிஸ் கௌஸ் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி டெய்லர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஆனார்.
அடுத்து வந்த நிதிஸ் குமார் 8, ஜோன்ஸ் 0, ஆண்டர்சன் 12, ஷயான் ஜஹாங்கீர் 3ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் அரை சதம் விளாசினார். அதிரடியாக விளையாடி ஹர்மீத் சிங் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் 81 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
எனினும், அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதற்கமைய தென் ஆபிரிக்க அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |