பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது சீனா
சர்வதேசக் கவலையைத் தூண்டிய சீன உரிமை கொண்ட தீவுடன் ஒரு வார பதற்றத்திற்குப் பின்னர், தாய்வானுடன் அமைதியாக மீண்டும் ஒன்றிணைவது குறித்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார்.
சீன மக்கள் பிரிவினைவாதத்தை எதிர்க்கும் புகழ்பெற்ற பாரம்பரியத்தை கொண்டுள்ளதாக பெய்ஜிங்கின் மக்கள் அரங்கில் பேசிய ஜீ ஜின்பின் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான ஒன்றிணைவு தாய்வான் மக்களின் ஒட்டுமொத்த நலன்களைச் சிறப்பாகச் சந்திக்கிறது எனவும், சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன மக்களின் உறுதியான உறுதிப்பாடு, விருப்பம் மற்றும் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கும் வலுவான திறனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்நாட்டின் முழுமையான ஒருங்கிணைப்பின் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.
சீனா மற்றும் தாய்வானுக்கு இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தாய்வான் பாதுகாப்புத் அமைச்சர் தெரிவித்திருந்தார். இருநாடுகளுக்கும் இடையே தற்செயலாக தாக்குதல் நடைபெறும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.
கடந்த வாரத்தில் தாய்வானின் வான் பாதுகாப்பு வலையத்தில் சீனா தொடர்ந்து இராணுவ ஜெட் விமானங்களை ஏவி வந்ததை அடுத்து தாய்வான் அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
தாய்வான் தன்னை ஒரு இறையாண்மையுள்ள சுயாட்சி நாடாக கருதுகிறது. எனினும் சீனா தாய்வானை தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.