சஜித்தின் மேதின கூட்டத்தை புறக்கணித்த இரண்டு முக்கிய புள்ளிகள்
SJB
Dr Rajitha Senaratne
G. L. Peiris
Mrs Thalatha Atukorale
May Day
By Sumithiran
கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி மற்றும் கூட்டத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய புள்ளிகள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் இன்று கோட்டையில் நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
ரிஷாத் பதியுதீனும்
அத்துடன் அகில இலங்கை முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீனும் கலந்து கொள்ளவில்லை.
இருவருக்கு முக்கியத்துவம்
இதேவேளை அண்மையில் சஜித் தரப்புடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு அம்சமாகும். அவர்களுக்கு முன் இருக்கைகள் கொடுக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 11 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்