தலிபான்களின் அடுத்த அறிவிப்பு - ஆண்மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை
ஆப்கானில் பெண்கள் எவருமே, ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாதென கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது தலிபான் அரசு.இதன் முதல் கட்டமாக அந்நாட்டின் போல்க் மாகாணத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள், பெண் மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டுமென தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என்று தலிபான் அரசின் பொது விவகாரங்கள் மற்றும் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல கட்டுப்பாடுகள்
ஏற்கனவே ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேற்படி தடையையும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தலிபான்களின் இந்த புதிய உத்தரவால், ஒட்டுமொத்த நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
