விளைவுகள் மோசமாகும் அமெரிக்காவுக்கு தலிபான்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
warning
us
taliban
By Sumithiran
ஆப்கான் வான்வெளியில் டிரோன்கள் பறந்தால் விளைவுகள் மோசமாகும் என அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் தலிபான்கள்.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
‘‘ஆப்கானிஸ்தானின் வான்வெளி அமெரிக்க டிரோன்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அனைத்து சர்வதேச உரிமைகள், சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மீதான உறுதிப்பாட்டை அமெரிக்கா மீறுவதை சமீபத்தில் பார்த்தோம். இந்த மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மோசமான எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.