கறுப்பு ஜூலை கொடூரம் :கனடா பிரதமர் வெளியிட்ட பதிவு
இலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றுடன் (24) 41 வருடங்கள் உருண்டோடுவிட்டது.
இந்த நாளை ஈழத்தமிழர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் அதன் வலியை தற்போதும் நினைவு கூர்ந்தே வருகின்றனர்.
அந்த வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடோவையும் கறுப்பு ஜூலை வலி கவலையடையச் செய்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,
கறுப்பு ஜூலையின் கொடூரம்
இன்றைய கறுப்பு ஜூலையின் கொடூரம் பற்றி பல கனேடிய தமிழ் மக்கள் சிந்திக்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.
So many Tamil Canadians are thinking about the horrors of Black July today.
— Justin Trudeau (@JustinTrudeau) July 23, 2024
As we remember the thousands of innocent people who were killed, and everyone who suffered in that brutal chapter of Sri Lanka’s history, we commit to building a future — here, and around the world —…
இலங்கையின் வரலாற்றின் கொடூரமான அத்தியாயத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும், பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும்போது, வெறுப்பு இல்லாத எதிர்காலத்தை - இங்கும், உலகம் முழுவதும் - கட்டியெழுப்ப நாங்கள் உறுதியளிக்கிறோம் என மேலும் அதில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கறுப்பு ஜூலையின் 41 ஆவது வருடத்தை குறிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கறுப்பு ஜூலை இலங்கையின் பெரும் இருண்ட அத்தியாயம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பெரும் இருண்ட அத்தியாயம்
“இன்றைய தினம் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்களையும் அவர்களது வர்த்தக நிலையங்களையும் இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஆயிரக்கணக்கில் அப்பாவிகளின் உயிர்கள் அழிக்கப்பட்டன. பல தமிழர்கள் காயமடைந்தனர். பலர் தகாத முறைக்கு இலக்காகினார்கள். நாட்டில் இருந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
கறுப்பு ஜூலை எனப்படும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் பதற்றங்களை அதிகரித்தது. அது பின்னர் தசாப்தகால ஆயுத மோதலாக பரிணமித்தது. இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக அது விளங்குகிறது.
புகலிடம் தேடி கனடா வந்த தமிழர்கள்
கறுப்பு ஜூலையின் பின்னர் 1800 தமிழர்கள் கனடாவிற்கு வருவதற்கும் தங்களினதும் தங்கள் குடும்பங்களினதும் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தேவையான விசேட நடவடிக்கைகளை கனடா எடுத்தது.
மனித உரிமைகளின் உறுதியான பாதுகாவலன் என்ற அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூற வேண்டும் என்று கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும்.
இன்றைய நாளில் கறுப்பு ஜூலையில் துயரத்தை சந்தித்த அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதில் கனடாவின் பிரஜைகளுடன் இணைந்துகொள்கின்றேன்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |